முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சய் தத் படங்களில் ரூ.250 கோடி முடக்கம்...!

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மார்ச். 23 - மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது மும்பை படவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சஞ்சய் தத் தற்போது 4 இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் சுமார் ரூ. 250 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சஞ்சய் தத் நடித்து வரும் படங்களில் ஒன்று போலீஸ் கிரி. இதனை டைரக்டர் ரவிக்குமார் எடுத்து வருகிறார். இது தமிழில் வந்த சாமி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை சென்னை, ஐதராபாத் என்று 2 வாரங்கள் கே.எஸ். ரவிக்குமார் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இப்படத்தில் பாதிக்கு மேல் படம் எடுக்க வேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் இவர் நடிக்கும் கிரானிங் டீக்கே 50 சதவீதம் முடிந்துள்ளது. இதை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். சஞ்சய் தத்துக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் படக்குழுவினர் தூக்கமின்றி தவிக்கின்றனர். இவரது மற்றொரு படமான அங்க்ளி 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஷேர் படமும் பாதியில் உள்ளது. இது குறித்து இந்தி பட தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், 

முன்னா பாய், சலே டெல்லி என்ற புதிய படங்களில் நடிக்கவும் சஞ்சய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவை இரண்டும் கைவிடப்படும் என்று தெரிகிறது என்றார். விளம்பர படங்களிலும் சஞ்சய் தத் நடித்து வந்தார். அவற்றை நிறுத்தி விட விளம்பர நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சில நிறுவனங்கள் சஞ்சய் தத் ஜெயிலுக்கு போவதால் அவருக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் கிடைக்கும். எனவே அவர் நடிக்கும் விளம்பர படங்களின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து விட்டு டி.வியில் ஒளிபரப்புவோம் என்றனர். இதனிடையே சஞ்சய் தத் தயாரிப்பாளர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஜெயிலுக்கு போவதற்கு அனைத்து படங்களையும் நடித்து முடித்து விடுவேன் என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்  கோரி சஞ்சய் தத் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மறு ஆய்வு மனு நிராகரிக்கப்பட்டால் சீராய்வு மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago