Thangam-Thennarasu1

சென்னை, ஏப்.- 25 - பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளது தன்னிச்சையான முடிவாகும் என தங்கம் தென்னரசு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து மாணவர்களிடையேயும், பெற்றோரிடமும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி முடிவடைந்து தற்போது மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பல லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துவரும் பிளஸ் 2 முடிவுகள் மே மாதம் 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கல்வித்துறை செயலாளர் சபீதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றபோது, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 14ம் தேதி வெளியாகும் என்றார். இதுவே அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும் கருதப்பட்டது.
ஆனால், இதற்கிடையில் நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வித்துறை செயலாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தங்கம் தென்னரசு கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வுகள் முடிந்ததும், மார்க்குகள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும், கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கமாகும்.
ஆனால், இம்முறை எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், கல்வித்துறை செயலாளர் அறிவித்திருப்பது தன்னிச்சையான செயலாகும். இதனை கண்டிக்கிறோம்.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.-*


அமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber AttackYAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Reviewதாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milkஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinayaஇள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title WinnerKanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupeesவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்: