முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசிப் போட்டிக்கு வருகிறார் வாட்சன்.. ஆஸி.க்கு கிடைக்குமா ஆறுதல்?

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

டெல்லி: மார்ச் - 25 - ஆஸ்திரேலிய அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள துணை கேப்டன் ஷான் வாட்சன், 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதனால் கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வாட்சன் வருகை உதவலாம் என்ற நப்பாசையில் ஆஸ்திரேலியர்கள் உள்ளனர். இந்தியாவுடனான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து அனைத்து வீரர்களும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வெல்வது குறித்த யோசனைகளை வழங்குமாறு அணி நிர்வாகம், வீரர்களைக் கேட்டுக் கொண்டது. ஆனால் வாட்சன் உள்ளிட்ட நான்கு வீரர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, தாமதம் செய்தனர், அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாட்சன் உள்ளிட்ட நான்கு வீரர்களும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உடனடியாக நான்கு பேரும் ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை அனைவரையும் அதிர வைத்தது. வாட்சன் போன்ற வீரர்கள் இல்லாததால் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கடுமையாக தடுமாறி வருகிறது. இந்த நிலையில்,4வது டெஸ்ட் போட்டியில் வாட்சன் மீண்டும் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 22ம் தேதி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதில், வாட்சன் கலந்து கொள்கிறார். வாட்சன் தவிர சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்ற 3 வீரர்கள் - ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்சல் ஜான்சன் மற்றும் உஸ்மான் காஜா ஆகியோர் ஆவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago