முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ - நாசா இணைந்து சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பமுடிவு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்: மார்ச் - 25 - இஸ்ரோ-நாசா இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்த ஆலோசனையைத் தொடர்ந்து, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு இஸ்ரோ மற்றும் நாசா கூட்டு முயற்சியில் சந்திராயன்-1 என்ற செயற்கை கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு தேவையான 2 கருவிகளை அமெரிக்காவின் நாசா வழங்கியது. இந்த நிலையில் 4-வது அமெரிக்க-இந்திய விண்வெளி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் வாஷிங்டனில் நடந்தது. அதில் இந்தியா, அமெரிக்காவை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இஸ்ரோ-நாசா இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து 'நாசாா விண்வெளி மையத்தின் நிர்வாகி சார்லஸ் போல்டன் கூறியதாவது:- நாசா-இஸ்ரோ இடையே ஆன உறவு மேம்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திராயன்-1 வெற்றியில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகித்தது. மேலும், இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் அனுப்பபட்ட பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் சிறப்பாக செயல்படுகிறது. தட்பவெப்ப நிலை, பருவ மழை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் இயற்கை வள மேம்பாடு தொடர்பான தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது இஸ்ரோவின் செயற்கை கோள் திட்டங்கள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. எனவே, இருநாடுகளின் கூட்டு முயற்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதுாஎன்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்