முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமர் ஹஸர் கோசோ

திங்கட்கிழமை, 25 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், மார்ச் - 26 - பாகிஸ்தான் இடைக்காலப் பிரதமராக ஓய்வு பெற்ற நீதிபதி மிர் ஹஸர் கான் கோசோ (படம்) (84) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஃபக்ருதீன் ஜி. இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ாஇடைக்கால பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களின் பின்னணி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் ஹஸர் கோசோவை இடைக்கால பிரதமராக தேர்வு செய்துள்ளோம். இவர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நேர்மையாகவும்,சுதந்திரமாகவும் நடத்துவதற்கு உறுதுணையாக இருப்பார் ா என்றார். பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மே 11 - ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை சுதந்திரமாக நடத்துவதற்கு வசதியாக, அந்நாட்டு சட்டப்படி, இடைக்காலப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இடைக்காலப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதையடுத்து, அந்நாட்டுச் சட்டப்படி இந்தப் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இடைக்காலப் பிரதமர் பொறுப்புக்கு 4 பேரின் பெயர்களை நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தது. இப்பட்டியலில் இஸ்ரத் ஹூசேன், ரசூல் பக்ஷ்பலேஜோ, முன்னாள் நீதிபதிகள் மிர் ஹஸர் கான் கோசோ, நஸூர் அஸ்லம் ஜாகித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கோசோவை இடைக்காலப்பிரதமராக தேர்ந்தெடுக்க, தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு உறுப்பினர் (பி.எம்.எல்.-என் கட்சியைச் சேர்ந்தவர்) எதிர்ப்பு தெரிவித்ததாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்