முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மையங்களை தாக்க தயார் நிலையில் வடகொரிய படை

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

சியோல்,மார்ச்.27 - ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ மையங்களை தாக்க வடகொரியாவின் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடகொரியா-தென்கொரியா இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வடகொரியாவானது அணு ஆயதத்தை பெருக்கி வருகிறது. இதை அமெரிக்கா மட்டுமல்லாது சீனாவும் எதிர்த்து வருகிறது. இந்தநிலையில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே உள்ள ஒரு தீவுப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வருகிறது. தற்போது இருநாடுகளுக்கிடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதால் அந்த நாட்டு மீதும் தாக்கல் நடத்த வடகொரியா தயாராகி வருகிறது. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் பல உள்ளன. இவைகளில் முக்கிய ராணுவ தளங்களான ஹவாலி மற்றும் குவாம் உள்பட அனைத்து ராணுவ தளங்கள் மீதும் வடகொரியா ராணுவம் தாக்குதல் நடத்த தயாராக உள்ளது. பீரங்கிப்படை பிரிவு, ஏவுகணை பிரிவு, கப்பல் படை பிரிவு, உள்பட அனைத்து ராணுவ பிரிவுகளும் மிகவும் தயார் நிலையில் இருக்கமாறு கொரிய மக்கள் ராணுவ தலைமை கமாண்டர் விடுத்துள்ள அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்