முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன் வயிற்றில் வெடிகுண்டு: சீனாவில் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

பீஜிங், மார்ச். 27 - சீனாவில் உள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மீன் மார்க்கெட் ஒன்று உள்ளது. அங்கு ஹுவாங் என்ற மீனவரிடம் ஒருவர் மீன் வாங்கியுள்ளார். ஹுவாங் அந்த மீனை நறுக்க முயன்றபோது ஏதோ ஒரு இரும்பு போன்ற ஒன்றில் கத்தி பட்டது. மீன் வயிற்றில் இரும்பா என்று பார்த்த போது அது வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. 3 அடி மீன் வயிற்றில் 8 இன்ச் வெடிகுண்டு இருந்தது.

உடனே இது குறித்து ஹுவாங் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் அவர்கள் மார்க்கெட்டிற்கு விரைந்து வந்து வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். அந்த குண்டு பழையதாக இருந்தாலும் வெடிக்கும் திறனுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏதாவது போர் விமானத்தில் இருந்து குண்டு கடலுக்குள் விழுந்திருக்கலாம். அதை மீன் விழுங்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்த குண்டு எவ்வளவு பழமையானது, சீனாவில் தயாரிக்கப்பட்டதா என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த மீன் ஜியாவோலிங் கவுன்ட்டி கடல் பகுதியில் பிடிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago