முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை சுகுமாரி மரணம்: முதலமைச்சர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணமடைந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியை கூறியிருப்பதாவது:- பழம்பெரும் திரைப்பட நடிகையும், மறைந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் திரு ஏ.பீம்சிங் அவர்களது மனைவியுமான திருமதி சுகுமாரி அவர்கள் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 

இன்று (26.3.2013) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

திருமதி. சுகுமாரி  சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமும், ்டுபாடும் கொண்டவர். தன்னுடைய 10-வது வயதிலேயே திரைப்படத்துறையில் காலடி எடுத்து வைத்த இவர் பாசமலர், பட்டிகாடா பட்டணமா உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட தமிழ்,  மலையாளம்,  கன்னடம்,  தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர். 

திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ள திருமதி.சுகுமாரி, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.    

எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான திருமதி சுகுமாரியின் மறைவு திரைப்படத் துறையினருக்கும், கலைத் துறையினருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.  

திருமதி சுகுமாரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் சார்பாக நடிகை சுகுமாரியின் உடலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago