முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., சிறையில் இந்திய கைதி சித்திரவதையால் மரணம்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

கராச்சி, மார்ச்.27 - பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி சேமல்சிங் என்பவர்  சித்திரவதை செய்யப்பட்டதால்  இறந்தார் என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு மூலம் தெரியவந்துள்ளது என்று எக்ஸ்பிரஸ் டிரிபியூன் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. எனினும் இந்தச் செய்தியை பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் அரசு மறுத்துள்ளது. இந்த பிரச்சனையை அரசியலாக்க முயற்சிப்பதாக அமைச்சரவை மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சேமல்சிங் இறந்து இரு மாதங்களுக்குப் பிறகு லாகூர் ஜின்னா மருத்துவமனை டாக்டர்கள் குழு அவரை பரிசோதித்தது. சேமல்சிங்கின் சடலம் இந்தியாவுக்கு மார்ச் மாதம் 13-ம்தேதி அனுப்பப்பட்டது.  அப்போது அவரது சடலம் பரிசோதனை செய்யப்பட்டது. சேமல்சிங் சடலம் ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது, அவரது சடலத்தை பரிசோதித்த டாக்டர் கூறுகையில், சேமல்சிங் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. அவர் சித்திரவதை செய்யப்பட்டதால் இறந்தார் என்று ஜின்னா மருத்துவமனையில் அந்த பத்திரிகை நிருபரிடம் கூறியுள்ளார். 

அரசு அதிகாரி முன்னிலையில் நடந்த சோதனையில் அங்கிருந்து செல்ல சேமல்சிங் மறுத்தார். இதையடுத்து அவரை ஜெயில் வார்டர்கள் தாக்கியுள்ளனர் என்று முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. சேமல்சிங்கின் சடலத்தில் 4 காயங்கள் இருந்தன என்று பிரேத பரிசோதனை  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமல்சிங் சாவுக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் அரசின் உள்துறைதான் முக்கிய காரணம். அவர்கள்தான் அவரது சாவுக்கு பொறுப்பு  என்று பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகளுக்கான வக்கீல் அவாஸிஸ் ஷேக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago