முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அழகியாக நவ்நீத் கவுர் திலான் தேர்வு

புதன்கிழமை, 27 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, மார்ச். 28 - மும்பையில் நடந்த பான்ஸ் பெமினா இந்திய அழகி போட்டியில் பஞ்சாபை சேர்ந்த நவ்நீத் கவுர் நிலான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெமினா இதழ் சார்பில் அழகி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 50 வது அழகிப் போட்டியாகும். அதே போல் இந்திய திரைப்படத் துறையின் 100 வது ஆண்டு விழாவாகும். இந்த போட்டியையொட்டி முன்னதாக டெல்லி, கொல்கத்தா, புனே, பெங்களூர், இந்தூர், கோவா, சண்டிகர் ஆகிய நகரங்களில் தகுதி சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் தேர்வான அழகிகள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு 23 அழகிகள் தேர்வானார்கள். 

மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் அழகிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். அழகிகளின் அணிவகுப்பு முடிந்ததும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் பதில் அளித்தனர். இறுதியில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த அழகி நவ்நீத் கவுர் திலான் 2013 ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த சோபிதா துலிபாலா 2 வது இடத்தையும், லக்னோவை சேர்ந்த சோயா அப்ரோஸ் 3 வது இடத்தையும் பிடித்தனர். அவர்கலுக்கு கிரீடங்கள் சூட்டப்பட்டன. 

அழகிப் போட்டியின் நடுவர்களாக நடிகை அசின், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் கரண்ஜோகர், ஜான் ஆபிரகாம், ரீதுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல் இந்த விழாவில் ஐஸ்வர்யாராய், சோணுநிகாம், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலிடம் பெற்ற நவ்நீத் கவுர் திலான் பாட்டியாலாவை சேர்ந்த ராணுவ அதிகாரியின் மகள் ஆவார். அவருக்கு வயது 20. அம்பாலாவில் உள்ள ராணுவ பள்ளியில் பயின்றி பின்னர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 

இந்த அழகி போட்டிகள் பாலிவுட் சினிமாவில் நுழைவதற்கான நுழைவு சீட்டாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஏற்கனவே அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர். அவர்களில் ஜீனத் அமன், ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்