முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியாவின் போர் மிரட்டல்: அமெரிக்கா உஷார்

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஏப். - 1 - வட கொரியா விடுத்துள்ள போர் பிரகடன அறிவிப்பை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தென் கொரியாவில் உள்ள அமெரிக்க நிலைகளைத் தாக்கி அழிக்கும் வகையில் அனைத்து ஏவுகணைகளையும் தயார் நிலையில் வைக்குமாறும், போர் தொடங்கி விட்டதாகவும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் ஹெய்டன் கூறுகையில், வட கொரியாவின் அறிவிப்பு குரித்து அறிவோம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். சீரியஸான அறிவிப்பு இது. தொடர்ந்து தென் கொரியாவுடன் தொடர்பில் உள்ளோம் என்றார். இருப்பினும் வெறுமனே கூச்சல்தான்போடும் வட கொரியா என்றும் அமெரிக்கத் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்