முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார் புத்ததேவ்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஏப்.26 - மேற்கு வங்க அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி கண்டு விட்டதாக பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியதற்கு மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியை கடுமையாக தாக்கி பேசினார். மாநில அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் சுமத்தினார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் புத்ததேவ் கூறும் போது, மேற்கு வங்க அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வி கண்டு விட்டது என பிரதமர் பேசியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர் எப்போது கண்டுபிடித்தார் எனத் தெரியவில்லை. பொதுக் கூட்டங்களில் விலைவாசி பற்றியோ, ஊழல் பற்றியோ, மாவோயிஸ்டு பிரச்சினை பற்றியோ பிரதமர் பேசவில்லை. நாட்டிலேயே சிறந்த முதல்வர் நான்(புத்ததேவ்) தான் என ஒரு காலத்தில் பிரதமர் புகழ்ந்து உரைத்தார். இப்போது தேர்தல் வந்து அவரது மனதை மாற்றி விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago