முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்கு வாபஸ்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

நாமக்கல், ஏப்ரல் 3 ​- காசோலை மோசடி வழக்கில்  நடிகர்  பவர் ஸ்டார்  சீனிவாசனுக்கு  நாமக்கல்  நீதிமன்றம்  பிடிவாரண்ட்  பிறப்பித்திருந்த  நிலையில்,  தான் வாங்கியிருந்த  கடன் தொகை ரூ. 2 லட்சத்தை  திங்கள் கிழமை  வட்டியுடன் அவர் திருப்பியளித்தார்.  இதையடுத்து, கடன் கொடுத்தவர்,  பவர்  ஸ்டார்  சீனிவாசன்   மீது தொடர்ந்திருந்த  வழக்கை  வாபஸ்  பெற்றுக் கொண்டார்.  சென்னை அண்ணாநகர்  சாந்தி காலனியைச் சேர்ந்தவர்  நகைச்சுவை  நடிகர்    பவர் ஸ்டார்  சீனிவாசன். இவர் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள்  சங்க  முன்னாள்  தலைவர்  பொன்னுசாமியிடம்  கடந்த  2008 - ஆம்  ஆண்டு  ரூ. 2 லட்சம் கடன் பெற்றாராம் அந்தப் பணத்துக்காக  2009 - ஆம் ஆண்டு, தொடக்கத்தில்  காசோலை  அளித்தாராம். பவர் ஸ்டார்  சீனிவாசன்  வங்கிக் கணக்கில்  போதிய பணம் இல்லாததால், அந்தக் காசோலை   திரும்பியது.  இதையடுத்து,  பொன்னுசாமியின்   மேலாளர்  வெங்கடாசலம் பவர் ஆஃப்  அட்டர்னி  பெற்று, நாமக்கல்   நீதித்துறை நடுவர் மன்றத்தில்  வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்கு  ஆஜராகாததால்,  2009 ஆண்டு  இறுதியில்,  சீனிவாசனுக்கு நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பித்தது.  பிறகு, அவர் தலைமறைவானார்.  இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15  ​- ஆம் தேதி சீனிவாசனுக்கு எதிராக  ஜாமீனில்  வெளிவர முடியாத  பிடிவாரண்ட் பிறப்பித்து  நீதிபதி  ஜோதி  உத்தரவு  பிறப்பித்தார். இதனடிப்படையில், நாமக்கல் போலீஸார்  அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில்,  சீனிவாசனின் வழக்குரைஞர்  ரூ. 2 லட்சம் தொகையை  வட்டியுடன்  பொன்னுசாமியிடம் திங்கள்கிழமை  திருப்பியளித்தார். இதையடுத்து,  பொன்னுசாமி தரப்பில்  வெங்கடாசலம் நீதிமன்றத்தில்  தொடர்ந்திருந்த  வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவரது வழக்குரைஞர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago