முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தலைமை தளபதி வயது விவகாரம் - அரசு விரைவில் முடிவு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.26 - இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் வயது வரம்பு விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இது விஷயத்தில் மத்திய அரசு இறுதி முடிவை விரைவில் எடுக்கும் என்று அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.

ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் வி.கே. சிங்கின் வயது விவகாரத்தில் முரண்பாடு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து நேற்று ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங்கின் வயது விவகாரத்தில் முரண்பாடு இருப்பதாக கூறப்படுவது குறித்து ராணுவ அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. சிங்கின் வயது விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரைவில் இறுதி முடிவை எடுக்கும் என்றார். இந்த முரண்பாடு குறித்து ராணுவம் அமைச்சகம் எப்போது முடிவு எடுக்கும் என்று நிருபர்கள் கேட்டதற்கு சற்று வேகமாக பதிலளித்த ஏ.கே.அந்தோணி, வயது குறித்து முடிவு எடுக்க ஏன் காலக்கெடு விதிக்கிறீர்கள் என்றார். சிங்கின் வயது குறித்த அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்த பின்னரே ஒரு முடிவு எடுக்க முடியும் என்றும் அந்தோணி கூறினார். 

வி.கே.சிங்கின் வயது சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கும்படி அவரை ராணுவ அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி வி.கே.சிங் சமர்ப்பித்திருப்பதாகவும் அவைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக டெல்லியில் நேற்று விமானப்படை கமாண்டர்களின் மாநாட்டை அந்தோணி தொடங்கிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்