முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க உண்ணாவிரத தீர்மானங்களின் விவரம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.3 - தென் இந்திய நடிகர்- நடிகைகள் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள தென்இந்திய  நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார். உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. உண்ணாவிரத முடிவில் நடிகர் சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடிகர் சரத்குமார் வாசித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு  ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்கு நன்றி. இலங்கை அரசு தமிழர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்கும்வரை இலங்கைக்கு இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக உயிரைத் தியாகம் செய்யாமல் அறவழியில் போராட வேண்டும். இலங்கை தமிழர்களை பாதுகாக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழீழத்தை வற்புறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்