முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை விமர்சனம் `சென்னையில் ஒரு நாள்'

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.-11 - ஜெயபிரகாஷ் - லட்சுமி ராமகிருஷ்ணனி ஒரே மகன் சச்சின், தொலைகாட்சி நிறுவனத்தில் நிருபர் வேலைக்கு சேர்ந்து பெரிய பிரபலங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படியே நடக்கிறது. பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்சை பேட்டி எடுக்க ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்கிறார். அப்போது விபத்து ஏற்படுகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சச்சின் உயிருக்கு போராடிக் கொண்டுயிருக்கிறார். அப்போது நடிகர் பிரகாஷ் ராஜ், ராதிகாவின் மகள் அக்ஷ்ராவுக்கு இதய ஆப்ரேஷன் வேலூர் மருத்துவமனையில் நடைபெறுகிறது. மாற்று இதயம் இருந்தால் குழந்தையை காப்பாற்றலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்போது உயிரோடு வாழ முடியாது என்று தீர்மான ஆகி மூளைச்சாவு ஏற்பட்டுயிருக்கும் சச்சின் இதயத்தை உயிரோடு வாழ துடிக்கும் அக்ஷராவுக்கு  பொருத்தலாம் என்று மருத்துவர்கள் யோசனை கூறி ஆப்ரேஷனுக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் சொல்கிறார்கள். சச்சினுடைய இதயம் கிடைக்கிறது. இதயத்தை அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையிலிருந்து வேலூர் மருத்துவமனைக்கு ஓட்டுனர் சேரன் எடுத்து வருகிறார். இதயத்துடன் வாகனம் வரும் போது சாலையில் சிலதடைகள் ஏற்படுகிறது. இந்த தடைகளை கடந்து வேலூர் மருத்துவமனைக்கு மாற்று இதயம் வந்ததா இல்லையா என்பது தான் `க்ளை மாக்ஸ்'.

மனித நேயத்தை முன்னிருத்தி படத்தின் கதையை அமைத்திருக்கும் பாபி - சஞ்சய்யை பாராட்ட வேண்டும். நெரிசல் நிறைந்து போக்குவரத்து அதிகம் உள்ள ஒரு நகரிலிருந்து புத்திசாலி தனமாக வாகனத்தை ஓட்டி வரும் சேரன் நடிப்பு அடிக்கடி இதயத்தை துடிக்க செய்கிறது. அதோடு வாகனத்தில் துணைக்கு வரும் பிரசன்னா தன் மனைவி இனியாவுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும். மிதுனை கொலை செய்ய சந்தர்ப்பம் பார்க்கும் நேரம் இன்னும் பட படப்பை கூட்டுகிறது.

போக்குவரத்து கமிஷனராக நடித்திருக்கும் சரத்குமார் மாற்று இதயத்தை எடுத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் புறப்படுவதிலிருந்து முடியும் வரை கண்ட்ரோல் அறையிலிருந்து வாக்கிடாக்கி மூலம் கொடுக்கும் தகவல்கள் அருமை அறையில் இருந்தபடியே நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அழகான மனைவி கணவருக்கு துரோகம் செய்து உல்லாசமாக இருக்கும் காட்சியில் பொருத்தமொக நடித்திருக்கிறார் இனியா நடிகராக வரும் பிரகாஷ் நடிப்பு குறை சொல்ல இடமில்லை. இவரின் மனையாக வரும் ராதிகா தன் கணவருக்கு விளங்கும்படி பேசும் வசன காட்சிகளில் நிமிர்ந்து நிற்கிறார். இவர்களுடன் பிரசன்னா விஜயகுமார், சந்தானபாரதி என அனைவரும் அற்புதமாக பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.

மெஜோ ஜோசப் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஷேஹநாத் ஜே ஐலால் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வாகனம் ஹைவே சாலையில் வருவதை அற்புதப்படுத்திருந்தாலும் கிராமத்தில் புகுந்து வெளியே வரும் போது சந்து பொந்துகளில் பந்து விளையாடியிருக்கிறது.

கேமரா மகஷ் நாராயன் எடிட்டிங் விறுவிறுப்பை தருகிறது. காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார். அஜயன்பாலா வசனம் நச் பல இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறது. இயக்கம் ஷ ஹித்காதர் தமிழ் சினிமாவில் நிலைக்க தடம் அமைத்திருக்கிறார். தயாரிப்பு ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன்.

இன்றைய பரபரப்பான சூழலில் மக்கள் பார்க்க வேண்டிய படம் சென்னையில் ஒரு நாள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்