முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.15 - தென்னிந்திய திரைப்படத்துறையின் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகரும், பன்மொழிப் புலவரும், சிறந்த கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். 

பி.பி.எஸ். என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸ் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி உட்பட 12 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியா வரம் பெற்றவை. ாகாலங்களில் அவள் வசந்தம்ா, ாமயக்கமா கலக்கமாா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.  மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடும் புதிய பாணியை திரை உலகுக்கு கொண்டு வந்தவர். 

பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள். எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திறம்பட பணியாற்றியவர்.  தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். 

டஆந என்ற இவரின் பெயரிலேயே டங்ஹநீஸஹஷகூ நடுடூகிடீஙு, அதாவது பின்னணிப் பாடகர் என்ற வார்த்தைகள் அடங்கியிருப்பது இறைவன் கொடுத்த வரம். இசையோடு  இவர் இரண்டறக் கலந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு திரைப்படத் துறையினருக்கும், இசைத் துறையினருக்கும் மட்டுமல்லாமல் எனக்கும் தனிப்பட்ட முறையில் ்டுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.   இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.   

பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

இவ்வாறு முதல்வர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்