முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியநாயகி வீரட்டானேசுவரர் திருத்தேரோட்டம் நடத்தப்படும்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 -  பெரியநாயகி வீரட்டானேசுவரர் கோயில் தேரோட்டம் வைகாசி மாதம் நடத்தப்படும் என்று அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.

நேற்று சட்டப்பரேவையில் அ.தி.மு.க உறுப்பினர் ப.சிவக்கொழுந்து கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-

பண்ருட்டி, திருவதிகை அருள்மிகு பெரியநாயகி உடனுறை வீரட்டானேசுவரர் ஆலயத்திலுள்ள தேரினை சீரமைத்து குடமுழுக்கு செய்ய அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பண்ருட்டி வட்டம், திருவதிகை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் நிர்வாகம் செயல் அலுவலர் மற்றும் தக்காரால் கவனிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையிலே இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சுவாமி தேரினை சீரமைக்க ரூ.9 லட்சமும், தேர் அச்சு மற்றும் சக்கரத்திற்கு ரூ.3.5 லட்சமும் நிதி உதவி வழங்கப்பட்டு திருத்தேர் திருப்பணி வேலைகள் 80 சதவீதம் முடிவுற்றுள்ளன. எஞ்சிய பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு முதல்வர் ஜெயலலிதாவின் மேலான அனுமதியுடன் வரும் வைகாசி மாதம் திருக்கோயில் தேரோட்டம் நடத்தப்படும்.

மேலும், திருக்கோயில் திருப்பணிக்கென அரசு மானியமாக ரூ.8.5 லட்சமும், உபயதாரர் பங்களிப்பாக சுமார் ரூ.20 லட்சமும் வழங்கப்படும். இத்திருக்கோயில் திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு முதல்வர் ஜெயலலிதா பொற்கால ஆட்சியிலே கடந்த 1.6.12 அன்று குடமுழுக்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago