முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. - கம்யூனிஸ்டு - புதிய தமிழகம் வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 17 - சட்டசபையிலிருந்து நேற்று  தே.மு.தி.க., கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  சட்டசபையில் நேற்று கூட்டுறவு சங்க தேர்தல் பற்றி விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் கட்சிகள் அனுமதி கேட்டனர்.

இதையடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதில் கூறுகையில், `கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடந்து வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்' என்றார். என்றாலும் இதுபற்றி விவாதம் நடத்த அனுமதிக்காததை கண்டித்து 3 கட்சிகளும் சபையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மானியக் கோரிக்கையின்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலமைச்சர் யாசகமாக கொடுத்தார் என்று தே.மு.தி.க. உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் கூறியதற்கு அக்கட்சியின் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ்டுபட்டனர்.

மைக்கேல் ராயப்பன் பேசும்போது, தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள மக்கள் நல திட்டங்களை வரவேற்று பாராட்டினார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் முகத்தை கூட முதலமைச்சர் பார்ப்பதில்லை என்றும், எதிர்க்கட்சி தலைவரின் ப வியை யாசகமாக கொடுத்தார் என்று மைக்கேல் ராயப்பன் கூறினார்.

அவர் கூறிய வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தே.மு.தி.க. உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

அவருடைய வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை என்று சபாநாயகர் கூறினார். அவர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

நத்தம் விசுவநாதன்: மைக்கேல் ராயப்பன் பேசியதில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் கடந்த நிகழ்வுகளை தான் கூறினார். உண்மையை சொன்னால் குற்றச்சாட்டாகுமா? எனவே, அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றார்.

இதனையடுத்து தே.மு.தி.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். அவர்களை அமரும்படி சபாநாயகர் தெரிவித்தார். இதனால், சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

கே.பி.முனுசாமி: உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் பேசியதில் எந்த தவறுமில்லை. நடந்து முடிந்த வரலாற்றை தான் கூறினார். முதல்வர் கை காட்டியதால் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது என்றார். எனவே, உறுப்பினர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கத்தேவையில்லை  என்றார்.

 முன்னதாகமானியக் கோரிக்கை விவாதத்தின்போது தே.மு.தி.க.-வுக்கு முதலில் பேச வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று அந்த கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர் அதை ஏற்கவில்லை. எனவே, தே.மு.தி.க.- எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்