முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாபலிபுர விழாவுக்கு அனுமதி வழங்க முடியாது: போலீஸ்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 17 - சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் வரும் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் சித்திரை திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று காவல்துறை சார்பில் நேற்று சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 25-ம் தேதி இந்த விழா நடக்க இருக்கிறது.

வராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நலன் மனுதாக்கல் செய்தார். அதில் வன்னியர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று மகாபலிபுரத்தில் சித்திரை திருவிழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்த வன்னியர் சங்கத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி பால்வசந்த குமார் ஆகியோர் முன்னிலையில்நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

வரும் 25-ந்தேதி மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடத்த அனுமதி கேட்டு வன்னியர் சங்கம் விண்ணப்பம் செய்திருந்தது. தமிழ்நாட்டில் நிலவிவரும் இரு பிரிவினருக்கு இடையேயான பதட்டம் காரணமாக சித்திரை திருவிழாவுக்கு ஏன் அனுமதி மறுக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன் சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் அனுமதியும் மறுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வன்னியர் சங்கத்திடம் இருந்து போலீசார் விளக்கம் பெற்று சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்குவது குறித்து வருகிற 19-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்