முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் பயணம் செல்வோரை தேர்வு செய்ய குலுக்கல்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான குலுக்கல் வரும் 23-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   

2013-ல் ஹஜ்ஞு பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ்ஞு குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஓதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ்ஞு குழுவின் அறிவுரைப்படி, ஹஜ்ஞு 2013-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ்ஞு குழு முடிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 23.04.2013 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநில ஹஜ்ஞு குழு மூலமாக ஹஜ்ஞு 2013-ல் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் க.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis