முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பொறுப்பேற்பு

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், ஏப். 19 - ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் புதிய நிரந்தர பிரதிநிதியாக அசோக்குமார் முகர்ஜி பொறுப்பேற்றுள்ளார். ஐ.நா. வுக்கான இந்தியாவின் புதிய நிரந்தர பிரதிநிதியாக இருந்தவர் ஹர்தீப்சிங் பூரி. கடந்த மாதம் பூரி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சிறப்புச் செயலாளராக இருந்த அசோக்குமார் முகர்ஜி அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

அவர் தமது பணிநியமன ஆவணங்களை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் ஒப்படைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அசோக்குமார் நியமனத்தை வரவேற்ற பான் கீ மூன், ஐ.நா.வில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டினார். அப்போது ஐ.நா. அமைப்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பை அசோக்குமார் விவரித்தார் என்று நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்