முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப்புலிகள் பட்டியலை வெளியிட ஐ.நா.சபை வற்புறுத்தல்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஏப்.28 - சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகளின் எண்ணிக்கையை இலங்கை அரசு வெளியிட வேண்டும் என்று ஐ.நா. சபை விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை போர்க்குற்றம் செய்ததாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐ.நா.சபை விசாரணைக்குழு இலங்கை சிறையில் உள்ள விடுதலைப்புலிகளின் எண்ணிக்கையை இலங்கை அரசு வெளியிடவேண்டும் என்று கோரியுள்ளது. 

இலங்கை அரசு விடுதலைப்புலிகள் குறித்து இனி செய்யவேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யதுள்ளது. அதந் விவரம் வருமாறு, இலங்கை அரசும் ஐ.நா. சபையும் சேர்ந்து பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. மனித உரிமைகள் மீறல்கள் குறித்து இலங்கை அரசு நீதியான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை கவனிக்க அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை ஐ.நா. சபை நிறுவ வேண்டும். மேற்படி கண்காணிப்பு குழு இலஙஅகை அரசின் விசாரணைகளை கண்காணித்து ஐ.நா. சபை பொதுச்செயலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கான ஆவண ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இலங்கை அரசாலும் ராணுவத்தாலும் மேற்கொள்ளப்படும் அனைத்து வன்முறை செயல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை நடத்தும் வகையில் அதற்காந வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். இறந்தவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கவேண்டும். போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உளவியல் உதவிகளை செய்யவேண்டும். தடுப்புக்காவலில் உள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பும் இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் இயல்பான நிலைக்கு திரும்பும் வரை தொடர்ச்சியான உதவிகள் வழங்க வேண்டும். காணாமல் போனவர்கள் குறித்து அரசு தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவசரகால சட்டம், தடுப்புக்காவல் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்கப்படவேண்டும். சிறையில் உள்ள விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்கள் அவர்கள் இருக்கும் சிறையின் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு உறவினர்களும் வக்கீல்களும் அனுமதிக்கப்பட வேண்டும். நீதி மன்றத்தின் மூலம் அவர்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும். சுதந்திர நடமாட்டங்களை தடை செய்யும் இலங்கை அரசிந் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும். போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பொதுமக்களின் இழப்புகளுக்கு இலங்கை அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இறுதிக்கட்ட போரின்போது மேற்கொள்ளப்பட்ட கொடுமையான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக தரத்தில் சிறப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். 2009ம் ஆண்டு ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த தீர்மானத்தை மீண்டும் ஐ.நா.சபை பரிசீலனை செய்ய வேண்டும். மனித உரிமைகளை, மனிதாபிமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போரின் போதும் அதன் பின்னரும் ஐ.நா.சபை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என்று ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்