முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலாடியில் கஞ்சா-போலி பிராந்தி அமோக விற்பனை

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

கடலாடி, ஏப்.28 - கடலாடிப்பகுதியில் கஞ்சா மற்றும் கள்ள மார்கெட்டில் உள்ள போலி பிராந்தி பாட்டில்கள் அமோக விற்பனை செய்யப்படுவதால் மாமவர் சமுதாயம் சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடலாடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆப்பனூர் மற்றும் இளம்செம்பூர் பகுதிகளில் பெட்டிக்கடைகளிலும் வீடுகளிலும் கஞ்சாவும் போலி பிராந்திகளும் விற்கப்படுகின்றன. ரூ.10 முதல் ரூ.15 வரை கஞ்சா பொட்டலங்களும் ரூ.30 முதல் ரூ.40 வரை போலி பிராந்திகளும் விற்பனை செய்யப்படுகிறது இப்பகுதியில் உள்ள போலீசார், உயர்போலீஸ் அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததால் மாதாமாதம் மாமூலை வாங்கிக்கொண்டு கணடு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் இளைஞர்கள் இவற்றை வாங்கி வாடிக்கையாக உபயோகிக்கிறார்கள்.  இதனால் இளைஞர் சமுதாயமும், மாணவர் சமுதாயமும் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால் சட்டத்தை கையில் எடுக்கும் போலீசாரே வேடிக்கை பார்க்கும் நிலை தான் என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்