முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் அருகே விபத்தில் 5 பேர் நசுங்கி சாவு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

பெரம்பலூர்,ஏப்.28 - பெரம்பலூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த கோர விபத்து சம்பவம் பற்றிய விபரம் வருமாறு;

சென்னையில் இருந்து திருச்சிக்கு இரும்பு தகடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியின் பின்னால் சென்னை மாங்காடு பகுதியில் இருந்து சோமசுந்தரம் மனைவி தங்கஅமிர்தம், இவரது மகன்கள் மாரிமுத்து, மற்றொரு மகன் வெங்கடேசன், மகள் சுசீலா, மருமகன் நடராஜன் மற்றும் மாரிமுத்துவின் நண்பரும், சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பிரேம்குமார் ஆகியோருடன் மாரிமுத்துவிற்கு பெண் பார்ப்பதற்காக பட்டுக்கோட்டைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் பாலமுருகன் ஓட்டிவந்தார்.

இந்நிலையில் லாரி பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு பகுதி துணை மின்நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரியின் ஆக்சைல் திடீரென உடைந்தது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. டிரைவர் லாரியை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த கார் பயங்கரமாக மோதியது. இதனால் அப்பகுதியில் பயங்கர சத்தம் ஒலித்தது. இதில் காரின் முன்பகுதி லாரியின் அடியில் சிக்கி நசுங்கியது.  இதில் இடிபடுகளுக்கு சிக்கி தங்கஅமிர்தம், மாரிமுத்து, சுசீலா, நடராஜன், பிரேம்குமார் ஆகிய 5 பேரும் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர்இழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிவெங்கடேசன், டிரைவர் பாலமுருகன் ஆகியோர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த கோரவிபத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 பின்பு உடனடியாக இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து பெரம்பலூர் எஸ்.பி.ருபேஷ்குமார்மீனா, டி.எஸ்.பி.சிவக்குமார், மங்களமேடு இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு தீயணைப்புத்துறை அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மீட்டனர். பின்பு அனைவரது உடலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்