முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்திலிருந்து குமரி-டெல்லி ரயில் தப்பியது

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 29 - செங்கல்பட்டு அருகே, அச்சரப்பாக்கத்தில் நடுதண்டவாளத்தில் லாரி பழுதடைந்து நின்றதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்தததையடுத்து, குமரி-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்த விபரம் வருமாறு:-​

அச்சரப்பாக்கம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக அச்சரப்பாக்கத்தில் இருந்து சித்தாமூர் நோக்கி ஒரு லாரி சென்றது.   தண்டவாளத்தின் நடுவே சென்ற போது திடீரென்று லாரி பழுதாகி நின்று விட்டது. அப்போது காலை மணி 6.50. அந்த நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நோக்கி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. நிலமையை புரிந்து கொண்ட கேட் ஊழியர் பன்னீர்செல்வம் உடனடியாக அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனே ரெயில்வே நிலைய மேலாளர் விஜயகுமார் ஒரத்தி ரெயில் நிலையத்தில் திருக்குறள் எக்ஸ்பிரசை நிறுத்த சிக்னல் கொடுத்தார். இதனால் பெரும் விபத்தில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் தப்பியது. அந்த ரெயிலை தொடர்ந்து வந்த பாண்டிச்சேரி​ சென்னை எழும்nullர் ரெயிலும் நடு வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு லாரி பழுது சீர் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகு சுமார் 1 மணி நேரம் தாமதமாக திருக்குறள் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இதுபற்றி அச்சரப்பாக்கம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago