முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிரச்சார கூட்டத்தில் அம்பரீஷ் அவமரியாதை

வியாழக்கிழமை, 2 மே 2013      சினிமா
Image Unavailable

 

மாண்டியா, மே. 3 - மாண்டியாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் நடிகரும், அத்தொகுதி வேட்பாளருமான அம்பரீஷ் அவமதிக்கப்பட்டுள்ளார்.சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் கர்நாடகாவில் 3 வது கட்ட பிரச்சாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். மாண்டியா தொகுயில் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அம்பரீஷ் தனது  மனைவி நடிகை சுமலதாவுடன் ராகுல் காந்தி கூட்டத்திற்கு வந்தார்.

சுமலதா மேடையின் பின் வரிசையில் அமர்ந்தார். மாண்டியா வேட்பாளர் என்பதால் அம்பரீஷ் ராகுல் காந்தி இருக்கை அருகே காலியாக இருந்த நாற்காலியில் உட்கார முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அம்பரீசை பின் வரிசையில் சென்று உட்காருமாறு கூறினார்.

இதை அவமானமாக நினைத்த அவர் மசூதனனுடன் வாக்குவாதத்தில் ஈ்டுபட்டார். 

ராகுல் காந்தி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த போது நீயே பேசு என்று கோபமாக கூறிவிட்டு அம்பரீஷ் மேடையை விட்டு இறங்கி பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்தார். அதன் பிறகு தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்பரீசை மேடையில் வந்து அமருமாறு கூறினார். ஆனால் அம்பரீஷ் மேடைக்கு வர மறுத்துவிட்டார்.

நான் மேடையில் இருந்தால் பிரச்சார செலவு வேட்பாளரான என் கணக்கில் சேரும். இப்போது அது கட்சி கணக்கில் சேரும். நீ என்னை அவமானப்படுத்தினாலும் எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய் என்று கூறி அவர் இறுதி வரை மேடையில் வந்து அமரவில்லை. ராகுல் கூட்டத்தில் அம்பரீஷ் அவமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago