முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் மேலும் 10 நாளிதழ்கள்

வியாழக்கிழமை, 2 மே 2013      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், மே. 3 - மியான்மர்நாட்டில் மேலும் 10 நாளிதழ்களை தனியார் வெளியிடுவதற்கான அனுமதியை அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூனும் மியான்மரில் இருந்து வெளியிடுவதற்கான லைசன்சை பெற்றுள்ளது.

மியான்மரில் ஜனநாயகப் பாதை மலரத் தொடங்கியதால் அண்மையில் 16 தனியார் நாளிதழ்களுக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் 11 நாளிதழ்கள் அச்சிடுவதற்கான லைசென்ஸ் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 10 க்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அனுமதி கொடுப்பட்டதில் அமெரிக்காவின் இண்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூனும் அடங்கும். மியான்மர் நாட்டில் வெளிநாட்டு ஆங்கில செய்தித் தாள் ஒன்று அச்சிடுவதற்கு தற்போதுதான் முதல்முறையாக அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்