முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித்சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

வியாழக்கிழமை, 2 மே 2013      இந்தியா
Image Unavailable

 

லாகூர், மே. 3 - பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங், லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 1990 ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த 26 ம் தேதி கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து சரப்ஜித்சிங்கின் சகோதரி, மனைவி மற்றும் 2 மகள்கள், லாகூர் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சந்தித்தனர். சரப்ஜித், நேற்று முன்தினம் மீள முடியாத கோமா நிலைக்குச் சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம், இந்தியத் தூதர் வலியுறுத்தியதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை ஒரு மணியளவில், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக் குழுவின் தலைவர் செளகத் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சரப்ஜித்சிங்கை சந்தித்து விட்டு நேற்று முன்தினம்தான் அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பினர். இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் அவர்களை தாக்கியது. கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சரப்ஜித்சிங்கின் உடலை இந்தியா கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago