முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலை நிறுத்தம் எதிரொலி - சென்னையில் விமானங்கள் ரத்து

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 29 -​ அகில இந்திய அளவில் விமானிகள் வேலை நிறுத்தம் செய்து வருவதையடுத்து சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விபரம் வருமாறு:- ஏர் இந்தியா விமானிகள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று டெல்லியில் இருந்து உள் நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லும் 36 விமானங்களும், மும்பையில் இருந்து செல்லும் 10 விமா னங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதே போல் சென்னையில் 6 ஏர் இந் தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்கப்nullர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத் தானதால் அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். விமான நிலையத்தில் காத்து இருந்த பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் இந்த பயணிகளுக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வர வழைக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு பயணிகளை அழைத்துச் சென்றது. விமானிகள் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு அந்தமான் செல்லும் விமானம் 6.30 மணிக்கு ஐதராபாத் செல்லும் விமானம் 10 மணிக்கு கொச்சி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால்பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 

பயணிகள் பலர் டிக்கெட்டை கேன்சல் செய்து வேறு விமானங்களில் இன்று பயணம் செய்தனர். இதே போல் கொச்சி, டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய 2 ஏர் இந்தியா விமானங்களும் ரத்தாகி உள்ளது. இதற்கிடையே இன்று 2​வது நாளாக விமானிகள் ஸ்டிரைக் nullடித்ததால் விமான சேவை மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்லி, சென்னை உள்பட நாடு முழுவதும் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்