முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவாண்டனமோ போராட்டம்: ஒபாமா மீது திடுக் புகார்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மே. 4 - அமெரிக்காவால் கியூபா அருகே குவாண்டனமோ சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிற பயங்கரவாத சந்தேக நபர்களின் போராட்டம் உண்ணாநிலைப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு சந்தேக நபர்களை அனுப்புவதைத் தவிர்க்கவே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஒபாமா நிர்வாகம் படுகொலை செய்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை புஷ் ஆட்சிக்கால வழக்கறிஞர் ஜோன் பெல்லிங்கர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவால் 2002 ம் ஆண்டு குவாண்டனமோ சிறைச்சாலை திறக்கப்பட்டது. உலகின் மிக கொடிய சித்தரவதை முகாமாக இது வர்ணிக்கப்படுகிறது. 

இந்த முகாமில் பல நூற்றுக்கணக்கானோர் எந்த வித அடிப்படை உரிமை இல்லாமலும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் சில கைதிகளுக்கு தொலைக்காட்சி, செல்போன் சேவை உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதால் கடந்த ஒரு மாத காலமாக நூற்றுக்கணக்கான கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ்டுபட்டு வருகின்றனர். இப்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ்டுபட்டு வருவோருக்கு வலுக்கட்டாயமாக மூக்கு வழியே உணவு செலுத்தப்பட்டும் வருகிறது. 

இதனிடையே புஷ் ஆட்சிக்காலத்தில் வழக்கறிஞராக இருந்த ஜோன் பெல்லிங்கர், குவாண்டனமோ சிறைச்சாலையை மூடுவேன் என்று ஒபாமா உறுதியளித்திருந்தார். ஆனால் அதைச் செய்யவில்லை. தற்போது குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு பயங்கரவாதிகளை கைது செய்து அனுப்புவதற்கு பதிலாக ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அவர்களை படுகொலை செய்கின்ற யுக்தியை ஒபாமா அரசு கடை பிடித்து வருகிறது. இது மிக மோசமான முன்னுதாரணம் என்றும் அவர் சாடியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்