முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தீமோத்தி ரோமர் ராஜினாமா

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.29 - இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தீமோத்தி ஜே.ரோமர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் வருகிற ஜூன் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதில் தற்போது அமெரிக்க தூதராக இருக்கும் தீமோத்தி ஜே.ரோமர் தனது பதவியை ராஜினாமா  செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் இந்த பணியை 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொண்ட போது தான் இந்த பணியில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நீடிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் தான் கூறியிருந்ததாகவும் ஆனால்  தனது குடும்ப பிரச்சினைகள் அதைவிட முன்னே நிற்பதாகவும் அதனால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தனக்கு இரு மகன்கள் இருப்பதாகவும் இவர்கள் இருவரும் அடுத்த மாதம் கல்லூரியில் சேர இருக்கிறார்கள் என்றும் தனது பெற்றோர்கள் மற்றும் மாமனார் மாமியார் ஆகியோரை தான் மிகவும் நேசிப்பதாகவும் அதனால் அவர்களுடனும் தனது மகன்களுடனும் அதிக நேரத்தை செலவிட இருப்பதாகவும் அதனால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் தீமோத்தி ஜே.ரோமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கொடுக்கப்பட்ட வியூக பணிகள் அனைத்தையும் தான் செய்து முடித்து விட்டதாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தனக்கும் தனது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கடந்த 2 ஆண்டு காலமும் நம்பமுடியாத அனுபவங்களும் நட்புகளும், அர்த்தமுள்ள பங்களிப்புகளும் கிடைத்துள்ளன என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா நட்பு 21 ம் நாற்றாண்டின் இணையற்ற நட்பு என்று தனது நண்பரும் ஜனாதிபதியுமான பாரக் ஒபாமா கூறியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள தீமோத்தி ஜே.ரோமர், இந்த நட்பு உலக அளவில் உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்