முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஜ்மல்கான் நடிக்கும் பாசக்கார நண்பர்கள்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்ரல்,29 - தம்பி அர்ஜூனா படத்தை தயாரித்த ஏஞ்சல் பிலிம் இண்டர்நேஷனல் படநிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் பாசக்கார நண்பர்கள். இந்த படத்தில் அஜ்மல்கான் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திவ்யா நாகேஷ் அறிமுகமாகிறார். இவர் அருந்ததி படத்தில் சின்ன வயது அனுஷ்காவாக நடித்தவர். இவர் கதாநாயகியாக        அறிமுகமாகும் படம் இது. முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். தம்பி அர்ஜூனா படத்தில் முக்கிய வேடமான தர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெரோஸ்கான் கிக்பாக்சிங் பயிற்சியாளராக நடிக்கிறார். மற்றும் பாலாசிங், வெ.ஆ.மூர்த்தி, ரிஷிராஜ், கொட்டாச்சி, முத்துராஜ், காசி, கிருஷ்ணா, மோனி, பாய்ஸ்.

ஒளிப்பதிவு மோகன்ராமன், இசை தினா, எடிட்டிங் எஸ்.பி.அகமது, ஸ்டன்ட் வாலிதேஜா, நடனம் ரவிதேவ், பாடல்கள் யுகபாரதி, ருக்சினா, தென்றல் செந்தில் பின்னி,  தயாரிப்பு நிர்வாகம் ஆறுமுகம், தயாரிப்பு மேற்பார்வை ரஃபி. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பெரோஸஸ்கான், தயாரிப்பு ஏஞ்சல் பிலிம் இண்டர்நேஷனல். படத்தை பற்றி இயக்குனர் பெரோஸ்கானிடம் கேட்டோம். இந்த பாசக்கார நண்பர்கள் தலைப்பே படத்தின் கதையை பிரதிபலிப்பதாக  உள்ளதே! பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களை பற்றிய கதை. தன் நண்பர்களுக்காக உதவி செய்யும் நோக்கதித்ல சகமானவன் அஜ்மல்கான் என்ன முடிவெடுக்கிறான் என்பது தான் மையக்கரு. உலக அளவில் நடக்கும் இக்பாக்சிங்சில் கலந்து கொண்டு வெற்றி மாலை சூடவேண்டும். அதன் மூலம் தனது நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறான் அஜ்மல்கான். அவன் ஒரு அனாதை என்பதும் கதாபாத்திரத்தின் பலம் அதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள், போட்டிகன் இதை கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம்.

அஜ்மல்கான் படித்துக் கொண்டிருப்பதும் 10-ம் வகுப்பு என்பதால் இந்த கதைக்கு அப்படியே நூறு சதவீதம் அச்சு அசலாக பொருந்திப்போனார். அதற்காக நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரிடம் நடன பயிற்சியும்,  ரபீக் என்பவரிடம் கிக்பாக்சிங்கும் பயிற்சி பெற்றார். அஜ்மல்கான், 11-வது வயதில் கராத்தே ஹூசைனியிடம் கராத்தே கற்று பிளாக்பெல்ட் வாங்கியவர் அஜ்மல்கான். காதலும், காமெடியும் இந்த படத்தின் கூடுதல் பலம். நிச்சயமாக நிறைய விருதுகளையும் வாங்கிக் குவிக்கும் என்கிறார் பெரோஸ்கான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago