முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கைதியின் உறவினர்கள் இந்தியா வருகை

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      இந்தியா
Image Unavailable

 

அமிர்தசரஸ், மே.8 - சண்டிகார் சிறையில சிகிச்சைபெற்று வரும் பாகிஸ்தான் கைதி சனாவுல்லா ரஞ்சையின் உடல் நலம் குறித்து விவரம் அறிய அவரது உறவினர்கள் இந்தியா வந்தனர். ஜம்மு சிறையில் தங்கி இருந்த சனாவுல்லா ரஞ்சை சிலரால் தாக்கப்பட்டார், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளார். அவரது உடல்நலம் எப்படி உள்ளது என்பதை அறிவதற்காக அவரது உறவினர்கள் முகமது செகாத், முகமது அஸிப் ஆகியோர் இந்தியா வந்தனர். அவர்களுக்கு 13 நாள் விசா கொடுக்கப்பட்டுள்ளது. சண்டிகார் வந்த அவர்கள் இருவரையும் பாகிஸ்தான் ஹைகமிஷன் அலுவலக அதிகாரிகள் வரவேற்ஹனர்.   

இதற்கிடையே சனாவுல்லா ரஞ்சையின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது என்றும் அவர் இன்னும் கோமா நிலையில்தான் உள்ளார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஹைகமிஷனர் சல்மான் பஷீர்  மருத்துவமனைக்குச் சென்று, சனாவில்லாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சனாவுல்லா நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளும் அமைதியை நிலைநாட்ட  வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர் சனாவுல்லாவை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார்.

பாகிஸ்தானிலுள்ள சியால்கோட் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான  சனாவுல்லா1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிறையில் அவரை சிலர் தாக்கினர். இதில் பலத்தக் காயமடைந்த அவரை அரசு மருததுவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சண்டிகாரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கோமா நிலையில் உள்ளார். அவரது நிலைமை  கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்