முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

இம்பால்,ஏப்.29 - மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கையெறி குண்டை வீசினார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இம்பாலின் புறநகர் பகுதியில் உள்ளது சந்தைபொரூ என்ற இடம். இங்கு ஜிம் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்திற்கு உள்ளேதான் தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினார்களாம். தீவிரவாதிகள் பணம் கேட்டிருந்ததாகவும் ஆனால் அதை பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை என்றும் அதனால்தான் ஆத்திரமடைந்து அவர்கள் கையெறி குண்டை வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டு வீச்சுக்கு எந்த ஒரு தனி நபரோ அல்லது இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்