முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த பழக்கங்களை பின்பற்ற சபாநாயகர் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஈடாநகர்,ஏப்.29 - ஜனநாயக ஆளுமை என்ற சிறந்த பழக்கங்களை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் வலியுறுத்தினார். பாராளுமன்றம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

வட கிழக்கு பிராந்திய காமன்வெல்த் பாராளுமன்ற சம்மேளனத்தின் 13 வது வருடாந்திர மாநாடு அருணாசல பிரதேசம் ஈடாநகரில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவில் பேசிய பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் மேற்கண்டவாறு வலியுறுத்தி பேசினார். இந்த மாநாட்டில் 8 வட கிழக்கு மாநிலங்களின் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு இன்றும் நடக்கிறது. 

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் காமன்வெல்த் பாராளுமன்ற சங்கம் மிகப் பெரிய வெற்று பெற்று சாதனை படைத்து விட்டதாகவும் சபாநாயகர் மீராகுமார் குறிப்பிட்டார். ஜனநாயக ஆளுமை என்ற சிறந்த பழக்கங்களை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அப்போது அவர் வலியுறுத்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்