முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாக். கைதி சனாவுல்லா மரணம்

வியாழக்கிழமை, 9 மே 2013      இந்தியா
Image Unavailable

 

சண்டிகார், மே.10 - காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் உள்ள கோட்பல்வால் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தபோது சிலரால் தாக்கப்பட்டு  சண்டிகார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சனாவுல்லா ரஞ்சை நேற்று மரணமடைந்தார்

இவர் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக 1999-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிலர் தாக்கியதில் காயமடைந்த  ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இவரை சண்டிகாரிலுள்ள மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் கோமா நிலைக்கு சென்றார். இவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆயினும் இவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத் தொடங்கின. கடைசியாக இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் இவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. சிறுநீரும் வெளியேறவில்லை.கோமா நிலையில் இருந்த இவருக்கு மூளை செயல்பாடுகளும் நின்றுபோயின.இதையடுத்து இவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக இவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் நேற்று மரணமடைந்தார். 

இதையடுத்து இவர் சிகிச்சைபெற்று வந்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.

சனாவுல்லா தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், தனது தூதரக அதிகாரியை நேரில் அனுப்பி பார்வையிடுமாறு செய்தது.பின்னர் சனாவுல்லாவின் உடலை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு கூறியது. 

இதற்கிடையே சனாவுல்லாவை பார்க்க சண்டிகார் வந்த அவரது உறவினர்கள் சனாவுல்லாவின் சடலத்தை தங்களிடம் தருமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே சனாவுல்லா திட்டமிட்டு கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. சனாவுல்லாவின் சொந்த ஊர் பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் ஆகும். அங்கு இவனது இறுதிச் சடங்குகளை நடத்த இவனது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக சனாவுல்லாவின் உடல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதையடுத்து சனாவுல்லாவின் சடலத்தை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத் துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் அஜீஸ் அகமது சவுத்ரி செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்