மேட்ரிட் ஓபன்: சானியா மிர்சா - மேடக் ஜோடி தோல்வி

வியாழக்கிழமை, 9 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

மேட்ரிட்,மே. 10 - அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி யில் மகளிர் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் சானியா மிர்சா மற்றும் பெத் தானி மேடக் ஜோடி தோல்வி அடைந்தது. மகளிருக்கான டபிள்யு. டி. ஏ. சங்கம் சார்பில் மேட்ரிட் ஓபன் போட்டி கடந் த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்ட த்தைக் கைப்பற்ற முன்னணி வீராங்க னைகள் களத்தில் குதித்து உள்ளனர். 

முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீராங்க னைகள் தரமான ஆட்டத்தை வெளிப் படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகி ன்றனர். 

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா அமெரிக்க வீரா ங்கனை பெத்தானி மேடக்குடன் இணைந்து ஆடி வருகிறார். 

சானியா மிர்சா மற்றும் பெத்தானி மே டக் ஜோடி 2 -வது சுற்றில், ரஷ்ய மற்று ம் செக். குடியரசு இணையை சந்தித்தது. 

இந்தப் போட்டியில் ரஷ்ய மற்றும் செ க். இணை சிறப்பாக ஆடி, 7 -5, 6 -1 என்ற நேர் செட் கணக்கில்,  இந்திய மற்றும் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 

இந்தப் போட்டி 1 மணி மற்றும் 10 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்தப் போ  ட்டியின் மொத்த பரிசுத் தொகை 4,033,254 யூரோக்களாகும்.

2 - வது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் சானியா மற்றும் மேடக் ஜோடிக்கு 12,000 யுரோக்கள் பரிசாக அளிக்கப்பட்டது. தவிர, இருவருக்கும் தலா 140  ரே ங்கிங் பாயிண்டும் அளிக்கப்பட்டது. 

இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் விரைவில் துவங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக சானியா மற்றும் மேடக் ஜோடி ரோம் மற்றும் பிரஸ்சல்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் போட்டி வரும் 26 - ம் தேதி ரோலண்டு காரோ ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: