முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேன்கனிக்கோட்டை அருகே பயிற்சி விமானம் விழுந்து விபத்து

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

ஓசூர் ஏப்.29​ - ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே வானில் பறந்து கொண்டிருந்த போர் பயிற்சி விமானம் திடீரென தீ பிடித்து வெடித்து கீழே விழுந்தது. இதில் பயணம் செய்த பைலட் மற்றும் பயிற்சியாளரும் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே லட்சுமிபுரம்,தேவநத்தம் பகுதியில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை தயார் செய்யும் இந்துஸ்தான் ஏராநாட்டிகல் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய நர போர் விமானம் ஒன்று நேற்று மாலை 4.30 மணியளவில் பறந்து கொண்டிருந்தது.

அந்த விமானத்தை பைலட் மாத்தூர் என்பவர் இயக்கினார். அருகில் பயிற்சியாளர் பத்ரா என்பவர் உடனிருந்தார். அப்போது நடு வானில் திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. உடனே பைலட் கண்ட்ரோல் அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களின் அறிவுரைப்படி இருவரும் பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து குதித்தனர்.

அவர்கள் குதித்த சிறிது நேரத்திற்கெல்லாம் விமானம் வெடித்து கீழே விழுந்தது எரிந்து சாம்பலாகியது.

விமானத்தில் இருந்து குதித்த பைலட் மாத்தூருக்கு காலிலும், பத்ராவிற்கு சிறு,சிறு காயங்களும் ஏற்பட்டது. சம்பவம் நடந்த சிறிந்து நேரத்திற்கெல்லாம் சம்பவ இடத்திற்கு இந்துஸ்தான் ஏரோ நாட்டில்கள் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் உள்பட 3 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் இருவரையும் ஆம்புலனஸ் ஹெலிகாப்டர் உதவியுடன் தூக்கிச் சென்றனர். 

பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய அதிகாரிகள் விமானம் எரிந்த பகுதிக்கு சென்று அந்த விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை கைப்பற்றிச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி.ஸ்ரீதர், கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் சந்தானபாண்டியன் உள்பட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

சிறிய ரக போர் விமானம் வெடித்து கீழே விழுந்ததால் தேவநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தனர். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்