முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு எண்ணுமிடங்களில் அனுமதி இல்லை- பிரவீன்குமார்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

கோவை, ஏப்.29 - வாக்கு எண்ணும் மையங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். வாக்கு எண்ணுவது குறித்து அதிகாரிகளுக்கு முதல் கட்ட பயிற்சி கோவையில் துவங்கியது. கலெக்டர்கள், ஆர்.டி.ஓக்கள் உள்பட 7 மாவட்ட அதிகாரிகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இந்த பயிற்சியை அளித்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை  மே 13 ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்தும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறார். இந்த பயிற்சியை துவக்கி வைத்து பிரவீன்குமார் பேசியபோது, வாக்கு எண்ணிக்கையை எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி நடத்த வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் யார் யாரை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறை தரப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வந்தாலும் அனுமதிக்கக் கூடாது. பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு தனியாக மையம் அமைத்து உடனுக்குடன் முடிவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அந்த டேபிளில் மட்டும்தான் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்றுத்தான் முடிவை அறிவிக்க வேண்டும். மைக்ரோ அப்சர்வர் கண்காணிப்பில் இருப்பார். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்