School 0

 

சென்னை, ஏப்.29- தற்போதுள்ள தரமில்லாத சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாட்டோம் என்றும்,  சமச்சீர் கல்வியின் தரத்தை மேம்படுத்த ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி முத்தரப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகிகள் கூறினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தினர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அதன் செயலாளர் எஸ்.கே.வெங்கடாசலபாண்டியன் கூறியதாவது:

தனியார் பள்ளிகள் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசின் புதிய கட்டண கொள்கையால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியாத நிலை உள்ளது. உச்சநீதிமன்றத்தின் டைரக்ஷன் படி சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் ஏப்ரல் 30க்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வேண்டும். ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால், மே மாதம் முதல் வாரம் வரை பள்ளிகள் கட்டணம் நிர்ணயிப்பதில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

தமிழக அரசின் சமச்சீர் கல்விக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்வி கொள்கையில் சரியான தரம் இல்லை. இதன் தரத்தை குறைத்துவிட்டார்கள். அவசர கோலத்தில் கொண்டுவருவதால் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. 

வழக்கமாக நாங்கள் புத்தக செலக்ஷனை பிப்ரவரி மாதத்திலேயே முடித்துவிடுவோம். மே மாதத்தில் மாணவர்களுக்கு புத்தகங்களை கொடுத்துவிடுவோம். 

ஆனால், இதுவரை புத்தகங்களை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. புத்தகங்கள் இல்லாமல் ஜூன் முதல் வாரத்தில் நாங்கள் எப்படி பள்ளிகளை திறக்க முடியும். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் இந்த கல்வி கொள்கையினை எதிர்த்து பலர் வழக்கு தொடர்ந்த போது அவர்களை தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு செல்லவிடாமல் சமரசம் செய்துவிட்டார்கள். ஆனால், இந்த கல்வி திட்டத்தில் போதுமான தரம் இல்லை என்பதற்காகத்தான் நாங்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றோம்.

எதிர்கால தமிழகம் மிகவும் கல்வியில் பின்தங்கிவிடாதபடி உடனே நல்ல பல சீர்திருத்தங்களை காலத்திற்கேற்ப செய்து நல்ல கல்வி திட்டங்களை கொண்டு வரவேண்டும். 

மேலும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று, தமிழகத்தில் அமைய இருக்கின்ற புதிய அரசு, சமச்சீர் கல்வியின் தரத்தை மேம்படுத்த  சிறந்த கல்வியாளர்களை கொண்டு முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். மெட்ரிக் பள்ளிகளின் தரம் பாதிக்கப்படாமல் புதிய கல்விக்கொள்கையினை செயல்படுத்த வேண்டும். 

எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இப்போதைய சமச்சீர் கல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எனவே, இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சங்கத்தின் பொருளாளர் என்.பி.கைலாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.


முகப்பருவை போக்க எளிய வீட்டு மருத்துவம் | Home remedies For Pimples | புஷ்பமாரி சித்த மருத்துவர்



பிரண்டையின்10 மருத்துவ குணங்கள் | Prandai 10 health benefits|Veld Grape | K.தம்பிதுரை சித்த மருத்துவர்



ஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் | Hero Lectro Electric Cycle Review



அமெரிக்கா - ரஷ்யா இடையே நடக்கும் Cyber War | Ransomware Cyber Attack



YAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review



தாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா? | Benefits of Mothers Milk



ஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்



தேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்



எனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya



இள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18



Whatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா? இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்



22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner



Kanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17



Tamil General Knowledge Questions and Answers|Brain Games Tamil|Tamil quiz | Interesting GK| Part 01



பிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupees



வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி? | Job Scams


இதை ஷேர் செய்திடுங்கள்: