முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுடன் எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம்: குர்ஷித்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 13 - சீனா, இந்தியா இடையே புதிய எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பணிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். 

சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீன ராணுவம் ஊடுருவியது போன்ற சம்பவம் இனி நடைபெற கூடாது என்று இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டது. இரு தரப்பு உறவை பலப்படுத்தும் முயற்சிக்கு இந்த பிரச்சினை தடையாக இருக்க கூடாது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளிடையே எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா விருப்பம் தெரிவித்தது. இது தொடர்பான பணிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன என்றார் குர்ஷித்.

முன்னதாக இந்த பயணத்தின் போது சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜிச்சியையும் குர்ஷித் சந்தித்து பேசினார். ஜிச்சி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனுடன் அடுத்த மாதம் எல்லை பிரச்சினை குறித்து 16 வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago