முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியா பல்கலையில் முதலிடம் பெற்ற இந்தியர்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், மே. 13  - கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த 18 வயது இளைஞர். கொல்கத்தாவை சேர்ந்த ரிதங்கர் தாஸ் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கடந்த நூற்றாண்டுகளில் இச்சாதனையை நிகழ்த்திய இள வயது பட்டதாரி ரிதங்கர்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பயோ என்ஜீனியரிங் கெமிக்கல் பயாலஜி ஆகிய இரு பட்டப்படிப்புகளை இவர் மூன்று ஆண்டுகளில் முடித்துள்ளார். வேதியியல் துறையில் கடந்த 58 ஆண்டுகளில் இச்சாதனை புரியும் முதல் மாணவர் இவர். 

பயோ என்ஜீனியரிங் துறையில் சாதனை புரியும் முதல் மாணவராக இவர் திகழ்கிறார். தனது 13 வது வயதில் ரிதங்கர் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் ஆய்வு படிப்பில் சேர்ந்தார். அதன் பின்பு எரிசக்தி தொடர்பான ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தினார். அதே போல் சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும் ரிதங்கர்தாஸ் திகழ்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எனது சாதனையை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் இல்லையென்றால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்