முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாதான் சிறந்த நட்பு நாடு: அமெரிக்கா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், மே. 13 - ஆசியாவில் குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவை தனது முக்கியமான நட்பு நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாஸ்டன் பல்லைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை துணை மந்திரி ராபர்ட் பிளேக் பேசியதாவது, 

21 ம் நூற்றாண்டின் ஆசியாவில் குறிப்பிடத்தக்க ஒரு நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது என்று அதிபர் அறிவித்து உள்ளார். ஆசியாவில் சம்நிலை நிலவ வேண்டும் என்று இந்தியாவுடன் நாங்கள் அதிகம் பேசி வருகிறோம். ஆசியாவில் இந்தியாவை விட வேறு எந்த ஒரு நாடும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக விளங்கவில்லை. பிராந்திய மற்றும் உலகப் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம், அறிவியல் குறித்த விஷயத்தில் ஒரே நோக்கத்துடனும், ஆர்வத்துடனும், இந்தியாவும், அமெரிக்காவும் ்டு இணையற்ற ஒத்துழைப்புகளுடன் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்புகளை பலப்படுத்தவும், விரிவுப்படுத்தவும் கடுமையாக உழைத்து வந்து இருக்கிறோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 4 ம் சுற்று பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் டெல்லியில் தொடங்கவுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பல்லம் ராஜூ அடுத்த வாரம் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்