முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் நல்லுறவை விரும்பும் நவாஸ் ஷெரீப்

திங்கட்கிழமை, 13 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.14 - பாகிஸ்தானின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்க உள்ள நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள விரும்புவது தெரிய வந்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் நிலையில் அங்கு ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதியாக இருந்த முஷாரப், நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்தியதோடு அவரை நாட்டை விட்டே வெளியேற்றினார். பல ஆண்டுகள் வெளிநாடுகளில் வசித்த நவாஸ் ஷெரீப் கடந்த 2008-ம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்து அரசியலில் தீவிரமாத இறங்கினார். இதனையொட்டி பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் 128 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதிபர் ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி படுதோல்வியை தழுவியுள்ளது. மேலும் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியும் எதிர்பார்த்தபடி தொகுதிகளை கைப்பற்றவில்லை. அவர் போட்டியிட்ட 3 தொகுதிகளில் ஒன்றில் தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்த தேர்தலில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு அமைக்க உள்ள ஷெரீப், இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொள்வேன் என்றார். இதை பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றுள்ளார். மேலும் இந்தியாவுக்கு வரும்மாறு ஷெரீப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார். இந்தியாவுடன் நல்லுறவை வைத்துக்கொண்டால் பாதுகாப்பு செலவு குறைவதோடு வர்த்தகத்தையும் பெருக்கிக்கொள்ளலாம். இது பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று ஷெரீப் கருதுகிறார். மற்றொரு பக்கம் தீவிரவாதிகளையும் ஒழிக்க இருநாடுகளுக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்