முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அதிபர் தேர்தல்: 686 பேர் வேட்புமனு

திங்கட்கிழமை, 13 மே 2013      உலகம்
Image Unavailable

டெஹ்ரான், மே.14 - வரும் ஜூன் மாதம் 14ம் தேதி நடக்கும் ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட 19 வயது வேட்பாளர், 30 பெண்கள் உள்பட 686 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.  ஈரானில் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட 30 பெண்கள் உள்பட மொத்தம் 686 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து வைத்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார் தெரிவித்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 19,87 வயது வேட்பாளர்களும் அடக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட 475 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் தேர்தலில் போட்டியிட 4 பேருக்கு மட்டுமே ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கோமேனி கட்டுப்பாட்டில் உள்ள கார்டியன் கவுன்சில் அனுமதி அளித்தது. கார்டியன் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய அதற்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அது கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் கேட்கலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்