முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கிமில் இந்திய - சீன அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

புதன்கிழமை, 15 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 16 - இந்தியா-சீனா இடையே நல்லெண்ண நடவடிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பான இருதரப்பு ராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சிக்கிமில் நடைபெற உள்ளது. இந்திய கடற்பரப்பில் அதிகரித்து வரும் சீன கடற்படைகளின் வேவு நடவடிக்கை, இந்திய எல்லைக்குள்ளான ஊடுருவல் போன்றவற்றால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. லடாக் பகுதியில் சீனா மேற்கொண்டிருந்த ஊடுருவல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக இருநாடுகளிடையே பதட்டம் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தின் நாது லா எல்லைப் பகுதியில் இந்திய -சீனா ராணுவ அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். 

கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி சீன அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரிகேடியர் நிலையிலான ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இருநாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரங்கள் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்