பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதல்

புதன்கிழமை, 15 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

தர்மசாலா, மே. 16 - ஐ.பி.எல். - 6 போட்டியில் தர்மசலாவி ல் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத் தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும்  டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோத உள்ளன.  தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டன. இருந்த போதிலும், கொல்கத்தா அணிக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. அடுத்த அணிகள் பெறும் வெற்றி, தோல்வி யைப் பொறுத்து இந்த வாய்ப்பு உள்ளது. 

எனவே கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் தடுமாறி வரும் டெல்லி அணியை வீழ்த்தும் முனைப்புடன் கள ம் இறங்குகிறது. 

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக ளுக்கு இடையேயான இன்றைய லீக் ஆட்டம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தர்மசாலா நகரில் நடக்க இருக்கிறது. ஆட்டம் இரவு 8.00 மணிக்கு துவங் குகிறது 

பிளே ஆப் சுற்றுக்கான முதல் 4 அணிக ளில் சென்னை, மும்பை மற்றும் ராஜ ஸ்தான் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன. 

4 -வது அணி என்பதற்கான போட்டியி ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 4 அணிகள் உள்ளன. 

9 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொட ரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற் போது 6 -வது இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை 14 ஆட்டத்தில் பங்கு கொண்டு மொத்தம் 12 புள்ளிகள் பெற்று உள்ளது. 

பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள 2 ஆட்டத்திலும் வெற் றி பெற வேண்டும். அதே நேரம் பெங் களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மீத முள்ள போட்டியில் தோற்க வேண்டும். 

பெங்களூர் அணி தனது கடைசி லீக்கி ல் சென்னை அணியை சந்திக்கிறது. ஐத ராபாத் அணி தனது கடைசி 2 லீக்கில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுடன் மோத உள்ளது. 

பஞ்சாப் அணி கடந்த லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இதில் பெங்களூ ர் அணி முதலில் ஆடி 174 ரன்னை எடுத் தது. பின்பு ஆடிய பஞ்சாப் அணி 3 விக் கெட் இழப்பிற்கு 176 ரன்னை எடுத்தது. 

எனவே பஞ்சாப் அணி வீரர்கள் அதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் களம் இறங்குகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: