முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்கள் எழுதிய கடிதத்தால் ஆஸி. பிரதமர் கண்ணீர்

வியாழக்கிழமை, 16 மே 2013      உலகம்
Image Unavailable

மெல்போர்ன், மே. 17 - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜூலியா கில்லர்டு தனது திட்டங்கள் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில், மக்கள் எழுதிய கடிதம் ஒன்றை படித்து விட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுதார். ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தால் ஏற்பட கூடிய நன்மைகளை விளக்கினார். மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்து கில்லார்டு பேசி கொண்டிருக்கும் போது, உணர்ச்சி வசப்பட்ட ஜூலியா, குயின்ஸ் லேண்டர்ஸ் நகர மக்கள் தங்களது கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதார். ஜூலியா பேசி முடித்து அமர்ந்த பின்னர், தொழிலாளர் கட்சியினர் மற்றும் மாற்று திறனாளி வழக்கறிஞர்கள் 20 பேர் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்