முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். இடையே கிரிக்கெட் சானியா விருப்பம்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 30 - இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இவ்விரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்த உதவும். இதைத் தான் இரு நாட்டு மக்களும் விரும்புகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இந்தியா, பாகிஸ்தான் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தை கூற முடியும். இரு நாட்டு பிரதமர்களும் ஒன்றாக இணைந்து கிரிக்கெட்டை ரசித்தனர். இரு நாட்டுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகளை ஏன் நடத்தவில்லை என்பது தெரியவில்லை. நான் சோகிப் மாலிக்கை மணந்ததை பெரிய வித்தியாசமாக நினைக்கவில்லை. ஒரு விளையாட்டு வீரரை மணந்தது விளையாட்டு வீராங்கனையான எனக்கு பல வகைகளில் உதவியாக உள்ளது. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. நான் 10 மணி நேரம் தூங்கினாலும் என்னை யாரும் கேள்வி கேட்பதில்லை. இக்கட்டான கட்டங்களில் சோகிப் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளார். அவர் மிகவும் அமைதியானவர் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்